தென் அமெரிக்கா – கயானா பகுதியிலுள்ள (Guyana) பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சம்பவ தினமான நேற்றைய தினம் (22.05.2023) மாணவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென அந்த விடுதியின் அறை ஒன்றில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த தீ மளமளவென அருகில் இருந்த ஏனைய அறைகளுக்கும் வேகமாகப் பரவியுள்ளது.

தீ விபத்து தொடர்பில் தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பல மணித்தியாலம் போராட்டத்துக்குப் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.