சுவிஸ் விஜயகுமாரன் குடும்பத்தால் இளைஞர் சேனை ஊடாக மூன்றாவது இல்லம் கையளிப்பு!

சுவிசில் வசிக்கும் சமூக சேவையாளர்களும்,இளைஞர் சேனையின் சிரேஷ்ட உறுப்பினருமாகிய விஜயகுமாரன் குபேரலட்சுமி(ஜீவா) தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில் இளைஞர் சேனையூடாக மூன்றாவது இல்லம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் இராவணன்விழுதுகள் அமைப்பு கல்முனை பிராந்திய #இளைஞர்சேனையிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக இந்த இல்லம் அமைத்து கொடுக்கப்படவுள்ளது

திருமதிகுபேரலட்சுமிவிஜயகுமாரன் (ஜீவா) தந்தையார் இளையதம்பி_பாலசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்தமாக அவர் வாழ்ந்த மற்றும் அதிபராக கடமையாற்றிய பொத்துவில் பிரதேசத்தில் அவரது நினைவாக பொத்துவில் இன்ஷ்பெக்ட்டர் ஏத்தம் கிராமத்தில் வசிக்கும் ஒரு விசேட தேவையுடைய குடும்பத்திற்க இல்லம் ஒன்றை அமைக்க முன்வந்து கடந்த வருடம் அடிக்கல் நாட்டப்பட்டது.

இப்போது இவ்வீடானது முழுமையாக கட்டப்பட்டு பூர்த்தி ஆகி குறித்த பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம் பெற்றது.
விஜயகுமாரன் குடும்பத்தினர் பல்வேறு சமூக அமைப்புகள் ஊடாக மேலும் பல வீடுகளை ஏற்கனவே வழங்கி உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்

You missed