அம்பாறை மாவட்டம், கல்முனை, துரைவந்திமேடு எனும் கிராமத்தைச் சேர்ந்த ஜனாசுகிர்தன் கிரண்யாஸ்ரீ எனும் நான்கு வயதுச்சிறுமி
மாபெரும் இரண்டு உலக சாதனைகள் படைத்துள்ளார்..

இவர் தனது இரண்டு கைகளாலும் A-Z வரை குறுகிய நேரத்தில் எழுதி அவர் படைத்த அவரின் சாதனையை அவரே முறியடித்து 2 உலக சாதனைகளை படைத்துள்ளார் கிரண்யாஸ்ரீ.
?முதலாவது சாதனை A-Z = 3.30          நிமிடங்கள்.
?இரண்டாவது சாதனை A-Z = 2.38   நிமிடங்கள்.

இவை இந்தியாவை தலைமயமாகக் கொண்டு இயங்கும் இரண்டு உலக சாதனை நிறுவனங்கள் மூலம் நிகழ்த்தப்பட்டது .
அவரின் தந்தை ஜனாசுகிர்தன் உலகில் மிகச் சிறிய சிவலிங்கத்தை மரத்தில் செதுக்கி உலக சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது