கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கல்முனை பற்றிமா கல்லூரி மாணவர்களுக்கு வைத்தியசாலை கட்டமைப்பு மற்றும் தொழிற்சார் நோக்கு நிலை பயிற்சி நெறியானது கடந்த ஒரு மாத காலமாக இடம் பெற்றது.

அம்மாணவர்களுக்கான சான்றிதழ் (21.04.2023) வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் இரா முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் ஜெ. மதன் பற்றிமா கல்லூரி பிரதி அதிபர் திருமதி சுகன்யா ரவீந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வின் போது சிறப்புரையாற்றிய வைத்தியசாலையின் பணிப்பாளர் இரா முரளீஸ்வரன் அவர்கள் பரீட்சையை எழுதி விட்டு பெறு பேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு வைத்தியசாலை கட்டமைப்பு, சேவைகள் பற்றி அறிந்து கொள்வதுடன் இந்த விடயங்களை சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்வதற்கான ஒரு வாய்ப்பும் இம்மானவர்களுக்கு கிடைத்துள்ளது என்பதை குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிகழ்வின் போது மாணவர்களது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.