இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் சிரேஷ்ட பணிப்பாளர் டெப்ரோஸ் முச்சினா, தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் யாமினி மிஷ்ரா, ரெஹாபி மஹ்மூர், தியாகி ருவன்பத்திரன, பாபுராம் பாண்டி உள்ளிட்ட குழுவினரே சஜித்தைச் சந்தித்துள்ளனர்.

அறிக்கை சமர்ப்பிப்பு

சர்வதேச மன்னிப்புச் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான அறிக்கையும் சிரேஷ்ட பணிப்பாளரால் எதிர்க்கட்சித் தலைவரிடம் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.