பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தும் நடவடிக்கையை இலங்கை போக்குவரத்துச் சபை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைவாக எதிர்வரும் 7ம் திகதி தொடக்கம் 13ம் திகதி வரையில் இந்த விசேட போக்குவரத்துச் சேவை இடம்பெறவுள்ளது.

தொடருந்து சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன

கொழும்பு மத்திய பேருந்து தரிப்பு நிலையத்திலும் கொழும்பை அண்டிய பிரதான நகரங்களில் இருந்தும் இந்த சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதி பொது முகாமையாளர் பண்டுக சுவர்ண ஹங்ச தெரிவித்துள்ளார்.

இதேபோன்று ஐந்தாம் திகதி தொடக்கம் தொடருந்து சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.


Warning: Undefined variable $post in /home/kalmowix/public_html/wp-content/themes/newsup/inc/ansar/hooks/hook-index-main.php on line 117