ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானின் இருநூறாவது அகவை ஆண்டினை முன்னிட்டு இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுகான தேசிய ஆக்கத்திறன் விருது – 2022 க்கான பிரதேச மட்ட போட்டி நிகழ்ச்சி இடம் பெற்றது.இதில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கும், அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கும், பல்வேறு வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கிய நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசர் ஆலய மற்றும் பத்திரகாளி அம்மன் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும், இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்களுக்கும், பரிசுப்பொருட்களை வழங்கி வைத்த கருணை உள்ளம் அறக்கட்டளை தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோருக்கும் அறநெறி பாடசாலை அதிபர் ஜெனிதா மோகன் நன்றிகளை தெரிவித்தார்.