‘‘தற்போது இலங்கை இராணுவத்தின் நிலையை பார்க்கும் போது இரு தரப்பாக படைத்தரப்பு பிரிந்திருக்கின்றது. ஒரு தரப்புக்கு எதிராக இன்னொரு தரப்பு செயற்படுவதற்கு அல்லது அந்த அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு விரும்பவில்லையென தெரிகிறது. எனவே இலங்கை இராணுவம் பலவீனமான நிலையை அடைந்துள்ளது அல்லது இருப்பிரிவாக பிரியக்கூடிய ஒரு சாத்தியக்கூறுகளே காணப்படுவதாக‘‘ இராணுவ ஆய்வாளர் ஆரூஸ் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

‘‘இலங்கை இராணுவத்தை பலமாக வைத்திருந்தால், அது இலங்கையின் அரசியலுக்கு ஆபாத்தானது என்று இலங்கையின் அரசியலை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தரப்பு எண்ணுவதும் ஒரு காரணமாக இருக்கலாம்‘‘ எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

You missed