இலங்கையிலுள்ள பாடசாலைகளில் இன்று (30.03.2023) முதல் புதிய திட்டமொன்று கொண்டுவரப்படவுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் முகமாக செயற்றிட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இச்செயற்றிட்டமானது நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் ஆரம்பம்.

இதன் முதல் கட்டமாக யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் மூலம் பாடசாலைகளில் ஆங்கில மொழியை மேம்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு நாளும் பத்து நிமிடங்கள் ஆங்கில மொழியை செவிமடுத்தல் மற்றும் உரையாடல் மூலம் ஆங்கில மொழி அறிவினை மேம்படுத்தும் நோக்கத்தில் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You missed