நாடாளுமன்ற அமர்வு இன்று (21.03.2023) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. அதனையடுத்து, மு.ப. 10.30 முதல் பி.ப. 5.00 மணி வரை, சட்டக்கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் விதிகள் (276 ஆம் அத்தியாயம்), நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் நாடாளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பில் விசாரிப்பதற்கும் அது தொடர்பில் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்குமான நாடாளுமன்ற விசேட குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துதல் பற்றிய தீர்மானம் மற்றும் பெட்ரோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் நிறைவேற்றப்படவுள்ளன.

அதன்பின்னர், பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.