உலக உடற்பருமன் தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிறப்பான நிகழ்வு நேற்று (20.03.2023) காலை 10 மணிக்கு இடம் பெற்றது .

இந்நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.இரா.முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்திய நிபுணர்கள், பொறுப்பு வைத்திய உத்தியோகத்தர்கள், நிர்வாக உத்தியோகத்தரகள், தாதிய பரிபாலகர்கள் மற்றும் பொறுப்பு தாதிய உத்தியோகத்தரகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தாரகள்.

இந் நிகழ்வினில் பிரதி பணிப்பாளர் DR.T. மதன் அவர்கள் வரவேற்பு உரையுடன் ஆரம்பித்து வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.இரா.முரளீஸ்வரன் அவர்கள் சிறப்பு உரையினை வழங்கினார்.

அதனை தொடர்ந்து போசனை பிரிவின் பொறுப்பு வைத்திய உத்தியோகத்தர் Dr.அகிலா காரியப்பர் விரிவுரையினை வழங்கினார்.

அடுத்து சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் Dr.A.W.M.சமீம் அவர்கள் விரிவுரையினை வழங்கினார்.

அதனை தொடர்ந்து சிறுபிள்ளை சிகிச்சை வைத்திய நிபுணர் S.N.ரொசாந் விரிவுரையினை நிகழ்த்தினார்.

அடுத்து மனநல பிரிவின் பொறுப்பு வைத்திய உத்தியோகத்தர் Dr.U.L.சராப்டீன் உரையினை வழங்கினார்.

அதனை தொடர்ந்து திட்டமிடல் பிரிவின் பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திரு.செல்வகுமார் அவர்கள் நன்றியுரையினை வழங்கி நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.