சேற்றுப் பசளை என்றழைக்கப்படும் செறிவூட்டப்பட்ட பொஸ்பேட் அல்லது TSP பசளை ஏற்றிய கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் USAID நிறுவனத்தின் உதவியின் கீழ், குறித்த பசளை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் 36 ஆயிரம் மெட்ரிக் தொன் பசளை ஏற்றிவரப்பட்டுள்ளது.

இலவசம்

இதற்கு மேலதிகமாக மற்றுமொரு கப்பலும் பொஸ்பேட் பசளை ஏற்றிக் கொண்டு எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

ஒரு ஹெக்டேயருக்கு 55 கிலோ கிராம் TSP உரம் வீதம், நாட்டிலுள்ள 12 இலட்சம் விவசாயிகளுக்கு இதனை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் குறித்த உரத் தொகையை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You missed