கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு பிரதேச செயலாளர் லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது.

சிறுவர், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனிதா மோகனின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மகளிர் அமைப்பினால் வில்லுப்பாட்டு மருதமுனை நாணல் அமைப்பின் கவியரங்கு …உட்பட பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இதன் போது கலை நிகழ்ச்சியில் பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனிதா மோகன் இயற்றிய மகளிர் கீதமும் பாடப்பட்டது. இந்நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் இணைப்பாளர் ஐ.எல் ஹாபீலா , அல் சுஹரா வித்தியாலயத்தின் அதிபர் மஜிதா ஆகியோரின் சிறப்புரையை நிகழ்த்தினர்.

. இதன் போது மகளிர் அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சியும் இடம்பெற்றது. பல அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.