உமா வரதராஜனின் “எல்லாமும் ஒன்றல்ல” நூல் நாளை (ஞாயிறு) வெளியீட்டு நிகழ்வு!

எழுத்தாளர் உமா வரதராஜனின் %எல்லாமும் ஒன்றல்ல” நூல் வெளியீடு கல்முனையில் நாளை இடம் பெறவுள்ளது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பதிப்பித்த இந் நூலின் வெளியீட்டு நிகழ்வு வியூகம் கலை இலக்கிய அமைப்பின் ஏற்பாட்டில் நாளை 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை பி. ப 3.30 மணிக்கு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்ல தம்பி மண்டபத்தில் இடம் பெறம்.

மேனாள் பேராசிரியர் செ. யோகராசா தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ச. நவநீதன் வெளியீட்டுரை நிகழ்த்தி நூலினை வெளியீட்டு வைப்பார். நூலின் முதல் பிரதியை மூத்த ஊடகவியலாளர் க. குணராசா பெற்றுக்கொள்வார்.
தொடர்ச்சியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்T. J அதிசயராஜ், டாக்டர் திருமதி புஷ்பலதா லோகநாதன், சோலைக்கிளி, மன்சூர் ஏ காதர், சபாசபேஷன், வாசுதேவன், சிவ வரதராஜன், சஞ்சீவி சிவகுமார், பி. சஜி ந்ரன் ஆகியோர் உரைகளும் இடம் பெறும்.

நிகழ்ச்சியை கஜானா சந்திரபோஸ் தொகுத்து வழங்குவார்