மாளிகைக்காடு நிருபர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக இன்று 2023.01.06 ஆம் திகதி கல்முனை நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் மற்றும் உணவு செய்யும் பாத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக இன்று கல்முனை நகர் பகுதிகளில் சுற்றாடல் தொழில்சார் மற்றும் உணவுப்பாதுகாப்பு சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ ஆர் எம் பௌசாத் அவர்களின் தலைமையில் உணவு மற்றும் மருந்துகள் பரிசோதர்கள் பிராந்திய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதர் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இச் சுற்றி வளைப்பில் பூஞ்சை மாண்டா உள்ளிட்ட பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் பிரதி பணிப்பாளர் எம்.பீ.ஏ.வாஜித் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதுடன் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு சுத்தமான சுற்றுச்சூழலை உருவாக்கவும் உணவுப்பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தவும் இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.