இலங்கையில் பெற்றோல் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பானது எந்தவொரு விலைச்சூத்திரத்தின் பிரகாரமும் மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தங்களின் விருப்பத்திற்கமைய இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

துறைமுகத்தில் இருந்து இறக்கப்படும் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 200 ரூபாவாகும் எனவும் உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோலுக்கு பாரிய வரி விதிக்கப்பட்டுள்ளமையால் 200 ரூபா பெற்றோல் லீற்றருக்கு மேலும் 200 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You missed