கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் digital health system ன் வெற்றிகரமான இரண்டாவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரையும் கௌரவிக்கும் நிகழ்வு 27.01.2023 அன்று இடம்பெற்றது.

இதில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் R. முரளீஸ்வரன் தலைமை உரையையும்,பிரதி வைத்திய அத்தியட்சகர் Dr.J. மதன் வரவேற்பு உரையினையும் மற்றும் consultant orthopedic surgeon Dr.S.வருன் பிரசாத் சிறப்பு உரையையும் வழங்கினார்கள்.

அத்துடன் கனடாவில் இருந்து Dr.S. திருமால் அவர்களும் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டு விசேட உரை ஒன்றினை வழங்கினார்.

அத்துடன் Digital health system ற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் இந்த நிகழ்வில் நினைவுச் சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.