உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம், இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைய உள்ளது.

இதேநேரம், நாளை மதியம் 12 மணிவரை வேட்புமனு சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வேட்புமனு கோரும் இறுதி நாளான்று வாக்களிப்பு இடம்பெறும் தினம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கல்முனை மாநகர சபைக்கு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்தி, உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களின் விசாரணை முடியும் வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும் என உயர்நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.