சமகால அரசாங்கம் வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு 60 டொலர் புதிய வரி விதித்துள்ளதாக வெளியான செய்தி உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான எவ்வித வரியும் தாம் விதிக்கவில்லை என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விமான டிக்கெட் கட்டணத்தில் ஏற்கனவே அந்த வரி உள்ளடங்கியுள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதனால் தனியாக ஒரு கட்டணம் வரியாக அறவிடப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

You missed