ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மார்ச் மாதத்திற்குப் பிறகு தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் அல்லது நாடாளுமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போதைய அரசியல் நெருக்கடிக்குப் நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்வதே ஒரே வழி என்று சிலர் கூறுகின்றனர்.

இது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு தொடர்ந்தும் பதிலளித்த அமைச்சர்.

ரணில் எடுக்க வேண்டிய தீர்மானம்

தற்போதைய அரசியல் நெருக்கடிக்குப் நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்வதே ஒரே வழி என்று சிலர் கூறுகின்றனர். இதில் இரண்டு பார்வைகள் உள்ளன.

இரு தரப்பினரும் நியாயப்படுத்தக் கூடிய காரணங்கள் உள்ளன. எப்படியிருந்தாலும், இறுதியாக இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன.

ஒன்று ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மார்ச் மாதத்திற்குப் பிறகு தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் அல்லது பாராளுமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

அந்த இரு பிரிவினருக்கும் அவர்களின் உரிமைகள் உள்ளன. அவர்கள் விரும்பும் வழியில் அவர்கள் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

You missed