தேசிய மட்ட போட்டிக்கு கிரான் மத்திய கல்லூரி மாணவன் பி. லுக்சிகன் தெரிவு!

தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மாகாணமட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்ட மட்டக்களப்பு கிரான் மத்திய கல்லூரி மாணவன் செல்வன் P. லுக்சிகன் வெற்றி பெற்று தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இவ் வெற்றிகளை பெறுவதற்கு வழி காட்டிய பாடசாலை அதிபர் திரு. செ. செல்வசுதேசன் அவர்களுக்கும் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பாடசாலையின் கணித ஆசிரியர் திரு. பாரதிராஜா உட்பட கணித ஆசிரியர்களுக்கும் , ஏனைய ஆசிரியர்கள் மற்றும் ஒத்துழைப்புகளை வழங்கிய பாடசாலை சமூகம் அனைவருக்கும் மாணவனின் பெற்றோர்களான பொன்னுத்துரை பிரியகுமார் , பிரியகுமார் ஜெகதீபா ஆகியோர் நன்றிகளை கூறினர்.

மேலும் இம்மாணவன் தேசிய மட்டத்திலும் சாதிக்க பாடசாலை சமூகம் சார்பான வாழ்த்துக்கள் தெரிவித்தனர்