மின்கட்டணம் இரு தடவைகள் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், வங்குரோத்து அடைந்துள்ள நாட்டில் வெள்ளைப்பூண்டு, தேங்காய் எண்ணெய், சமையல் எரிவாயு போன்றவற்றில் கொள்ளை அடித்ததுடன் தற்போது மேலும் மேலும் வரி அறவிடுவதுடன், மக்களுக்கு மேலும் சுமைகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறானதொரு நாடு உலகில் இருக்கின்றதா என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றவர்கள், நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்றவர்கள் இன்று மகிழ்ச்சியாக தமது நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றனர்.

நாட்டு மக்கள் வங்குரோத்து நிலையில் விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற போது மின்கட்டணத்தையும் வரியையும் அதிகரிப்பதற்கு காரணம் எதுவும் அரசாங்கத்திற்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.