நாட்டில் கடந்த சில மாதங்களாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் பல்வேறு பட்ட வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில் தற்போது தேர்தலை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது.

மறுபுறம் அரசியற் கட்சிகள் தமது உள்ளூராட்சி சபை வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் மேலும் பிளவு ஏற்பட்டுள்ளது என அக்கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் இருந்து இன்னோர் அணி பிரிந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து சுயாதீனமாக செயற்படப் போவதாகத் தெரியவருகின்றது.

இந்தக் குழுவின் யோசனைகளை – கருத்துக்களை அரசு புறக்கணித்து நடப்பதாலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அறியமுடிகின்றது.