போதைப்பொருள் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் கிடைத்தால் மாத்திரம் பாடசாலை மாணவர்களை பரிசோதிக்குமாறு பொலிஸ் மா அதிபர் சி. டி.விக்கிரமரத்ன அனைத்து பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனை பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரிப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பாடசாலை மாணவர்களின் புத்தக பைகளை சோதனை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

இந்நிலையில் போதைப்பொருள் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் கிடைத்தால் மாத்திரம் பாடசாலை மாணவர்களை பரிசோதிக்குமாறும், பாடசாலை மாணவர்களின் புத்தக பைகளை தேவையின்றி சோதனை செய்ய வேண்டாம் என்றும் பொலிஸ் மா அதிபர் சி. டி.விக்கிரமரத்ன அனைத்து பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களின் புத்தக பைகளில் போதைப்பொருள் இருக்கிறதா என்று சோதனை செய்வது அந்த மாணவர்களின் கல்வி கற்கும் மனநிலைக்கு பெரும் இடையூறாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.