கல்முனை ஆதார வைத்தியசாலை ஊழியர் நலம்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புலமையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு 21.12.2022 அன்று சிறப்பாக நடைபெற்றது.

இதில் சங்கத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளின் சிறப்பு சாதனைகள் பாராட்டுகளோடு கௌரவிக்கப்பட்டனர் இந்த நிகழ்வானது வைத்திய அத்தியட்சகர் Dr.இரா. முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக பிரதி வைத்திய அத்தியட்சகர்களான. Dr S. இராஜேந்திரன், Dr. J. மதன் அவர்களுடன் வைத்தியசாலையின் கணக்காளர் கேந்திர மூர்த்தி, நிருவாக உத்தியோகத்தர் தேவ அருள் உட்பட வைத்திய சாலையின் ஊழியர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வின் போது 74 புலமையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.