கல்முனை காணி பதிவாளராக மேகலா சிவநேசன் கடமையை பொறுப்பேற்றார்.

கல்முனை காணி பதிவாளரார் அலுவலகத்துக்கு புதிய பதிவாளராக மேகலா சிவநேசன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடமையாற்றியவர் இடம் மாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள காணிப்பதிவாளர் நேற்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதிவாளர் சேவையில் 20 வருட அனுபவம் கொண்ட மேகலா சிவநேசன் மேலதிக மாவட்ட பதிவாளராக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திலும், காரைதீவு பிரதேச செயலகத்திலும் கடமையாற்றி இருந்தார்.

பதிவாளர் நாயகத்தின் 2022.12.05 ம் திகதி கடிதத்தின் படி காணி பதிவாளர் ஆக பதவி உயர்வு பெற்று கல்முனை காணி பதிவக த்துக்கு உடன் இடமாற்றம் செய்யப்பட்டு கடமையையும் அன்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.