பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குஜ்ரன்வாலாவில் (Gujranwala) நடைபெற்ற பேரணியில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்ரான் கானின் காலில் துப்பாக்கிச் சூடு பட்டதாகவும், அவருக்கு ஆபத்தில்லை என்றும், அவர் லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.