வி.சுகிர்தகுமார் 

 ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து இவ்வருடம் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட 77 மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்;தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று சாயிசமித்தி நிலையத்தின் மண்டபத்தில் நேற்று இரவு இடம்பெற்றது.

ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்;தின் தலைவர் வி.சுகிர்தகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்து பீ;டத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.குணபாலன் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் அருளாளராக ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ப.கேதீஸ்வரக்குருக்கள் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக மேலதிக மாவட்ட பதிவாளரும் சட்டமானியுமான எம்.பிரதீப் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற தலைவர் த.கயிலாயபிள்ளை ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் வே.சந்திரசேகரம் ஓய்வு பெற்ற அம்பாரை மாவட்ட உள்ளகக்கணக்காய்வாளர் எஸ்.கனகரெத்தினம் ஆலய முன்னாள் தலைவர் க.கிருஸ்ணமூர்த்தி முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நடராஜா இந்து இளைஞர் மன்ற உபதலைவர்  எஸ்.புண்ணியமூர்த்தி ஓய்வு நிலை அதிபர் கோபாலபிள்ளை அதிபர்களான மு.சண்டேஸ்வரன் க.ஜெயந்தன் ந.நேசராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அதிதிகளை வரவேற்கும் நிகழ்வோடு ஆரம்பமான நிகழ்வில் மங்களவிளக்கேற்றல் இறைவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து ஆசியுரையினை சிவஸ்ரீ ப.கேதீஸ்வரக்குருக்கள் வழங்கினார்.

தொடர்ந்து ஆலயத்;தின் தலைவர் வி.சுகிர்தகுமார் உரையாற்றுகையில் ஆலங்கள் சமய பணிகளோடு சமூக பணிகளையும் முன்னெடுக்க வேண்டும் எனும் அடிப்படையில் ஆலய உண்டியல் வருமானத்தில் மூன்றிலொரு பகுதியை சமூகப்பணிகளுக்காக ஒதுக்கியுள்ளோம். அதிலும் குறிப்பான கல்வி அபிவிருத்தி முக்கியத்துவம் வழங்குவது எனும் தீர்மானத்திற்கு அமைய பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 77 மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தோம். இதற்கான நிதி உதவியினை பல சமூக நலன் விரும்பிகள் முன்வந்து வழங்கினர். ஏனைய உதவிகளை சிலர் வழங்கினர். அந்த வகையில் உதவி செய்த அனைவருக்கும் அழைப்பை ஏற்று வருகை தந்த அதிதிகளுக்கும் ஒத்துழைப்பை வழங்கிய நிருவாகம் திருப்பணிச்சபை மகளிர் அணி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

இதன் பின்னர் உரையாற்றிய இந்து இளைஞர் மன்ற தலைவர் த.கயிலாயபிள்ளை பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்து பீ;டத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.குணபாலன் ஆகியோர் ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த நிகழ்வை பாராட்டுவதாகவும் இதுபோன்ற செயற்பாடுகள் மாணவர்களுக்கு உந்துதலை ஏற்படுத்தும் எனவும் கூறினர். கல்வி அபிவிருத்திக்கான இதுபோன்ற செயற்பாடுகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் எனவும் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் இலக்குடன் கல்வி பயணத்தை தொடர்வதுடன் இந்த சமூகத்திற்கு தேவையான ஒழுக்கமுள்ள பிரஜையாக உருவாக வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

இதன் பின்னராக அதிதிகள் அனைவரும் இணைந்து மாணவர்களுக்கான பாராட்டு சின்னத்தை வழங்கி வைத்ததுடன் பதக்கங்களையும் அணிவித்தனர்.
இறுதியாக செயலாளர் ந.தர்மராஜாவின் நன்றியுரையுடன் நிறைவுற்றது.