வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவினால் இடம்பெறும் நூறு நாள் செயல் முனைவின் 87 ஆவது நாள் முனைவு இன்றைய தினம் அம்பாரை மாவட்ட சம்மாந்துறைபிரதேச செயலகத்திற்குற்பட்ட வளத்தாப்பிட்டியில் இடம்பெற்றது

100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் அம்பாறை மாவட்டத்தின் வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் இன்று (26.10.2022) மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து நடைபெற்றது.

“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 87ம் நாள் போராட்டம் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, பிரதேசத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி கிராமத்தில் இன்று(26.10.2022)இடம்பெற்றது. இன்றைய கவனயீர்ப்பில் சம்மாந்துறை பிரதேசத்தின் விவசாய சங்கத்தினர், சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்கள் இணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும். எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, என கோசங்களை எழுப்பியவாறு வளதாப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் கோயிலில் இருந்து பேரணியாக வருகைதந்தது வளத்தாப்பிட்டி சந்தியில் தங்களின் உரிமை சார்ந்த கோரிக்கைகளையும்முன்வைத்தனர்.

100 Days of Action is People’s Voice