நலன்புரி நன்மைகள் செலுத்தல் தொடர்பில் தகுதியான நபர்கள் மற்றும் குடும்பங்களை கண்டறியும் வேலைத்திட்டம் – 2022
-/அரவி வேதநாயகம்

நலன்புரி நன்மைகள் செலுத்தல் தொடர்பில் தகுதியான நபர்கள் மற்றும் குடும்பங்களை கண்டறியும் வேலைத்திட்டமொன்று தற்போது நடமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டத்தில் தகுதியான நபர்கள் மற்றும் குடும்பங்களை கண்டறிவதற்காக விண்ணப்பப் படிவத்தின் மாதியை பூர்த்திசெய்து தத்தமது பிரதேச செயலகத்தில் ஒப்படைக்குமாறு அமைச்சு கேட்டுள்ளது.

அத்துடன் வீடுகள்தோறும் தரவுகளை திரட்ட கள அதிகாரிகளை ஈடுபடுத்தவும் அமைச்சினால் பிரதேச செயலகங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.