தமிழக குண்டுவெடிப்பில் இலங்கை கிழக்கு மாகாண முஸ்லிம் இரு நபர்களுக்கும் தொடர்பு

தமிழகம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம் பெற்ற கார் குண்டு வெடிப்பு தொடர்பில் ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் இருவர் இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தீவிர விசாரணையை மேற்கொண்டு வரும் இந்திய புலனாய்வுp பிரிவு அறிவித்துள்ளதாக காலைக்கதிர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தீபாவளி திருநாளுக்கு முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் கோவையில் உள்ள இந்து ஆலயம் அருகில் கார் ஒன்று வெடித்து சிதறி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய புலனாய்வு பிரிவினர் பலகோணங்களில் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

காரில் இருந்த ஒருவரும் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்