ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி, கம்பஹா மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து, அவருடன் அரசியலில் பயணிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நடாத்துவதற்கு, குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.