ஈழத் தமிழரின் உரிமைக்காக குரல் கொடுப்போம் கமலஹாசன் ஸ்ரீதரன் எம்பியிடம் உறுதி

ஈழத் தமிழர்களின் உரிமையை நிலை நாட்டுவதற்கு அறவழியில் தொடர்ச்சியாக எமது ஆதரவு இருக்கும் என மக்கள் நீதி மையத்தின் தலைவரும் பிரபல நடிகருமான கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கமலஹாசனை நேரில் சந்தித்து உரையாடிய போது கமலஹாசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது இலங்கை தமிழர்களின் வரலாறுகள் அடங்கிய ஆவணங்கள் நூல்கள் சிறிதரன் எம்பியால் கமலஹாசனுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.