படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 22ஆவது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில்!

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 22வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு நாளை (19) திகதி காலை 10.00 மணியளவில் காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் நினைவுதினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள நினைவுதின நிகழ்விற்கு
ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கின்றனர் நிகழ்வின்
ஏற்பாட்டுக்குழுவினர்.