கல்முனை கடற்கரையில் ஆசிரியையின் சடலம் மீட்பு

(சாய்ந்தமருது செய்தியாளர்)

கல்முனை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது.

காரைதீவு-05, தம்பிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஆறுமுகம் வனிதா என்பவரது சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் கல்முனை மாமாங்க வித்தியாலயத்தில் ஆசிரியையாக கடமையாற்றுபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மீனவர்கள் சிலர் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்துக்கு வருகை தந்த கடற்படையினர் சடலத்தை மீட்டு, கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்..

இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சடலம் கல்முனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது மரணம் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப் பட்டிருப்பதாகவும் இன்று காலை பாடசாலை செல்வதாக தெரிவித்து இவர் வீட்டிலிருந்து சென்றிருந்தார் என அவரது கணவர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.