உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் உள்ள மல்வத்தை புதுநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பாடசாலை அதிபர் திரு எஸ். சிவயோகராஜா மற்றும் பிரதி அதிபர் ஏ.எல்.சர்ஜீன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் புலம்பெயர்ந்த வாழும் ஜேர்மனியில் உள்ள சமூக சேவையாளரும் வர்த்தகருமான மாட்டின் ஜெயராஜ் அவர்களும், கல்விக்கான கண்கள் அமைப்பின் ஸ்தாபகரும் சமூக சேவையாளருமான கனகலிங்கம் மகாலிங்கம் அவர்களும், கமலேஸ்வரன் அவர்களும், இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் அவர்களும் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு கலந்து கொண்ட மாட்டின் ஜெயராஜ் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் “சிறுவர்களே எமது எதிர்கால தலைவர்கள்.

அவர்கள் வாழ்வதற்குரிய சூழலை உருவாக்குவதற்குரிய வளங்களை வாய்ப்புக்களை அமைத்துக் கொடுப்பதே எங்களுடைய பிரதான நோக்கமாகும்.

இதற்காக எமது புலம்பெயர்ந்த வாழும் உறவுகள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும். தற்போது நாங்கள் இலங்கையில் உள்ள பல மாவட்டங்களிலும் முதலீடுகளைச் செய்துள்ளோம்.

இதன் உற்பத்திகளை ஐரோப்பிய சந்தைக்கு அனுப்புவதே பிரதான நோக்கமாகும்.

” மேலும் இங்குள்ள 98 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கு வைனஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் விக்னேஸ்வரன் சிவபாதம் அவர்கள் வழங்கியிருந்தார்.