வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு ஆதரவானவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்.

மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் போதைப் பொருள் கடத்தலை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை சமூக வலைதளங்களை தவறான பிரசாரங்களுக்கு பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் சட்டத்தை கொண்டுவருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கமல் குணரத்ன தெரிவித்தார்.

பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தில் கலந்துகொண்டு கருது தெரிவிக்கும்போதே பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.