முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

ஆசிய கிண்ணங்களை வென்ற அணிகளை வாழ்த்தியுள்ள கோட்டாபய 

ஆசிய கிண்ணங்களை வென்ற, இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் பெண்கள் வலைப்பந்தாட்ட அணியை வாழ்த்துவதற்காக அவர் இந்த பதிவை இட்டுள்ளார்.

“ எமது தாய் நாட்டுக்கு கௌரவமான புகழை பெற்றுக்கொடுத்து ஆறாவது முறையாகவும் ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கும், ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை பெண்கள் வலைப்பந்தாட்ட அணிக்கும் எனது வாழ்த்துக்கள்” என கோட்டாபய ராஜபக்ச அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச இதற்கு முன்னர் கடந்த ஜூலை 13 ஆம் திகதியே முகநூல் பக்கத்தில் இறுதியாக பதிவு ஒன்றை இட்டிருந்தார்.