நாட்டில் பற்றாக்குறையாக காணப்படும் 50 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அவசர தேவைக் கருதி கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

ஏறத்தாழ 110 மருந்துகள் வரை தட்டுப்பாடு காணப்படுவதாகவும் அவற்றின் மிக அவசியமான 50 மருந்துகளையும் எக்ஸ்ரே பிலிம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களையும் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் செயலாளர் ஜனகஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

You missed