கடனை மீளச் செலுத்தமுடியாது விட்டால் இலங்கையின் சொத்துக்களை தங்களுக்கு சொந்தமாக எழுதி வைக்குமாறு சீனா கூறியுள்ளதாக எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை ஏற்படுமாக இருந்தால், ஹம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலையம், மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட நாட்டின் முக்கிய சொத்துக்களை சீனாவுக்கு எழுதி வைக்க வேண்டிவரும் என்றும் கூறியுள்ளார்.

கடனை மீளச் செலுத்தமுடியாது விட்டால் இலங்கையின் சொத்துக்களை தங்களுக்கு சொந்தமாக எழுதி வைக்குமாறு சீனா கூறியுள்ளதாகவும் இதற்கு அரசு உடன் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.