அரச நிறுவனங்களுக்கு கடிதங்களை அனுப்பும் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

கடிதத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள்

அந்த அறிக்கையில், அரச நிறுவனங்களுக்கு கடிதங்களை அனுப்பும் போது ​​கடிதங்களை அனுப்பும் நபரின் முகவரி வதிவிடத்திற்கான தனிப்பட்ட தொலைபேசி மற்றும் கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள், வட்ஸ்அப் இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிடுமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.