உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.2018 ஆம் ஆண்டு இடம் பெற்ற உள்ளூராட்சி தேர்தலின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

எனினும் உள்ளூராட்சி சபைகளுக்கு பொறுப்பான அமைச்சரினால் குறித்த சபைகளின் பதவிக்காலம் 2023 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.

தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்களுக்கு அமைய இவ்வாண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியும்.

வாக்காளர் பதிவு இடாப்புகள் ஒக்டோபர் 31ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் முடிவு எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு 5 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாகவும் இம்முறை அது 8 முதல் 10 பில்லியன் வரை ஆகலாம் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.