கனடாவில், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக மக்களின் கேள்விக்கு மழுப்பல் பதிலளித்த சாணக்கியன் எம்பி

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தற்போது கல்முனையில் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம் இனவாத அரசியல்வாதிகளினால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் தடுக்கப்பட்டு வருகின்றன. அண்மைக்காலமாக இருக்கும் அதிகாரங்களையும் பறிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.
மாறி மாறி வரும் அரசாங்கத்தில் ஆளுங்கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த போதும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு விளைவிக்கப்பட்டு வரும் அநீதிக்கு தீர்வை காண தவறியமை அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் மாத்திரம் அல்ல இலங்கையின் அனைத்து தமிழ் மக்கள் மத்தியிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளுக்காக நாடாளுமன்றத்திலும் வெளியிலும் குரல் கொடுத்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சில தினங்களின் முன்னர் கனடா சென்று இருந்தார்.
கிழக்கு மாகாண மக்கள் ஒன்று கூடும் பாடும் மீன்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு சென்றிருந்த சாணக்கியன் எம்பி யிடம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக அங்கிருந்த மக்களால் கேள்விகள் தொடுக்கப்பட்டன. இதன் போது இதற்கு மழுப்பல் பதிலளித்த சாணக்கியன் எம்பி ஒரு சிலரினால் புகைப்படம் எடுக்க அதற்கு முக்கியதத்துவம் கொடுத்திருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சில இளைஞர்கள் சாணக்கியன் எம்பி இடம் கடும் தொனியில் பேசியதாக சம்பவ இடத்திலிருந்து ஒருவர் எம்மிடம் கூறி இருந்தார்.

நீங்கள் ஒரு மக்கள் பிரதிநிதி கனடாவில் ஒரு சாதாரண குடிமகன் கேட்கும் கேள்விக்கு உரிய பதிலை வழங்க வேண்டியது கட்டாயமாகும் .

கல்முனை விடயத்தில் தமிழருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் சூழ்ச்சிகளுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளும் இனவாத முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்ற போது நீங்கள் கட்சிக்குள்ளும் கட்சிகளுக்கு இடையிலும் பிளவுபட்டுக் கொள்வதும் சுய விளம்பரங்கள் செய்வதிலுமே அதிக அக்கறை செலுத்துகின்றீர்கள். முதலில் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி தீர்வு காண முயலுங்கள் என ஒரு இளைஞர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அந்த இடத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்