ரணிலை எதிர்த்த விமல் சீன கப்பலை முண்டியடித்து புகழ்ந்து வரவேற்பு!

-கேதீஸ் –

சர்ச்சைக்குரிய சீன அதி தொழில்நுட்பக் கப்பல் இன்று ஹாம்மாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.

சட்லைட் மற்றும் ஏனைய தகவல்களை
ஆய்வு செய்யக்கூடியது என கூறப்படும் இந்த கப்பலால் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பில் விளைவுகள் இருப்பதாக கூறி இலங்கைக்கு இந்த கப்பல் வருவதற்கு இந்தியாவும்,அமெரிக்காவும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.

இன்று இந்த சீன கப்பல் ஹாம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தவுடன். அதனை வரவேற்கும் நிகழ்வில் கடந்த ஆட்சி காலத்தில் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடன் நெருக்கமாக இருந்த நாடாளு மன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குழுவினர் முண்டியடித்துக் கொண்டு சீனக் கப்பலை வரவேற்று, நிகழ்வில் அதனை புகழ்ந்தும் பேசி இருந்தார்.

புதிய ஜனாதிபதி தெரிவின் போது இவர் அணியினர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு ஆதரவு வழங்காமல் எதிராக போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவ வழங்கியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் கப்பல் எதிர்வரும் 22 ஆம் தேதி வரை இலங்கையில் தரித்து நிற்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை நேற்று இந்தியாவினால் இலங்கைக்கு கடல் பகுதிகளை கண்காணிக்கும் விமானம் ஒன்று அன்பளிப்பாக வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.