இந்தியாவின் டோனியர் 228 விமானம் நேற்றே இலங்கையில் – சீனாவின் yuan wang 5 கப்பல் இன்று இலங்கையில்

சீன Yuan Wang 5 என்ற ஆய்வு கப்பல் சற்று முன்னர் ஹம்பாந்தொட்டை துறைமுகத்தை வந்நதடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் கடல் பிரதேசத்தை கண்காணிக்கும் நவீன விமானம் ஒன்றை இந்தியா வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கப்பலுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக குறித்த கப்பல் கடந்த 11 ஆம் திகதி நாட்டிற்கு பிரவேசிக்கவிருந்தது.

அந்த கப்பலின் வருகையால் தமது நாட்டுக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இந்திய அரசாங்கத்தால் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இதன்காரணமாக அந்த கப்பலின் வருகையை பிற்போடுமாறு இலங்கை அரசாங்கம் சீனாவிடம் கோரியிருந்தது.

எவ்வாறாயினும், சீன கப்பலுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு உள்நுழைய வெளிவிவகார அமைச்சு கடந்த 13 ஆம் திகதி அனுமதியளித்திருந்தது.

இந்தநிலையில், இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ள கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் நாட்டில் இருந்து வெளியேறவுள்ளதாக குறித்த கப்பல் நிறுவனம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்துள்ளது.