தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் காரணமாக குழந்தைகள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பாகும் என்று பரிட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி அனைத்து பெற்றோர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை என்பது ஒரு குழந்தைக்கு ஒரே ஒரு பரீட்சை மட்டுமே. இந்த குழந்தைகள் எதிர்காலத்தில் இதையும் விட முக்கியமான பரீட்சைகளை எதிர்கொள்ளும் ஆற்றலைக் கொண்டுள்ளனர். எனவே, இந்த புலமைப்பரிசில் பரீட்சையை மட்டும் காரணம் காட்டி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்று நான் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.