கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விலங்கு விசர்நோய்த்தடுப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் AMH வைத்தியசாலை வளாகம் மற்றும் நோயாளர் விடுதிகளிலும் பூனைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு 2022.08.10ஆம் திகதி நடைபெற்றது.

இதில் பூனைகளுக்கும் நாய்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதுகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் வழிகாட்டலில் தொற்று நோய்த்தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஏ.சீ.எம்.பசால் மற்றும் தடுப்பூசி ஏற்றுனர் AT.முஹம்மட் பைசின் அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதது.