பொருளாதார நெருக்கடி, அரசியல் மாற்றங்கள், இராஜதந்திர நெருக்கடி என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இலங்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இலங்கை தற்போது ஒரு தர்ம சங்கடமான நிலையை எதிர்கொண்டுள்ளது. அதுதான் இலங்கை வரவிருந்த சீனக் கப்பல் விவகாரம்.

சீனாவின் அதி தொழில்நுட்பத்துடன் கூடிய விஞ்ஞான ஆய்வு கப்பல் ஒன்று இம்மாதம் 11-ம் திகதி முதல் 17ஆம் திகதிவரை இலங்கை வந்து ஹாம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த கப்பல் வருகையானது தென்னிந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் செய்மதிகள் மற்றும் ஏனைய விடயங்களை ஊடுருவி தகவல் சேகரிக்கும் இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால் இலங்கைக்கு இந்த சீன கப்பல் வருவது தொடர்பாக இந்தியா கடும் எதிர்ர்ப்பையும், அதிருப்தியையும் வெளியிட்டிருந்தது.

எந்த சந்தர்ப்பத்திலும் இந்தியாவுடன் நல் உறவை பேண வேண்டிய இலங்கைக்கு இந்தியாவின் கருத்தை கவனத்தில் எடுக்க வேண்டிய தேவை உள்ளது. இதனால் இலங்கை வருவதற்கு இருந்த சீனக்கப்பலை சற்று தாமதப்படுத்துமாறு இலங்கை சீனத் தூதரகம் ஊடாக அறிவித்திருந்தது.

IMF உதவி இலங்கைக்கு கிடைப்பதற்கு கடன் மீள் உருவாக்கம் அவசியம் இதற்கு சீனாவின் சம்மதமும் தேவையாக உள்ள இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை இக்கட்டான நிலைமையை எதிர்கொண்டுள்ளது.

இருந்தாலும் இந்த இராஜதந்திர நெருக்கடியை ஏதோ ஒரு வகையில் முகம் கொடுக்க வேண்டிய இலங்கை, கப்பல் வருகையை தாமதப்படுத்துமாறு கோரி இருந்தது. இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட உடன் பல அவசர உதவிகளைச் செய்த, செய்து வருகின்ற இந்தியாவின் உறவும் இலங்கைக்கு மிகவும் அவசியமாக உள்ளது.

இலங்கையின் இந்த அறிவிப்பால் கோபமடைந்த சீனா பாதுகாப்புக் காரணங்களை மேற்கோள் காட்டி கொழும்புக்கு இந்தியா அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது என்று சீனா தனது கோபத்தை கொட்டியுள்ளது.

இலங்கைக்கு தொடர்ச்சியாக பல சவால்கள் வந்த வண்ணம் உள்ளன.
சர்வ கட்சி அரசு உருவாகி புதிய ஜனாதிபதி அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு இலங்கைத் திருநாடு முன்பிருந்த நிலையையாவது முதலில் அடைந்து விட வேண்டும் என்பதுதான் என்று எல்லோரின் எதிர்பார்ப்பாகும்.


Warning: Undefined variable $post in /home/kalmowix/public_html/wp-content/themes/newsup/inc/ansar/hooks/hook-index-main.php on line 117