முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இலங்கை வருவதற்கான திகதியை கூறவில்லை என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பியோடியது ஏன்? என மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவப்பட்டபோது, “கோட்டாபய தப்பிச் சென்றுள்ளார் என குற்றம் சுமத்துவது யார்?” என பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு ஊடகவியலாளர் மக்கள் தான் குற்றம் சுமத்துகின்றனர் என கூறியுள்ளார். “யார் என்ன வேண்டுமானாலும் கூறட்டும் எனினும் அவை அனைத்தும் கட்டுக்கதைகள்” என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

“கோட்டாபய ராஜபக்ஷ மருத்துவ பரிசோதனைகளுக்காகவே வெளிநாடு சென்றுள்ளார். அவர் என்னிடமும் கூறிவிட்டு தான் சென்றுள்ளார்.

எனினும் அவர் நாடு திரும்பும் திகதியை எனக்கு கூறவில்லை” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.