த. தே. கூ – ஜனாதிபதி ரணில் இடையே சந்திப்பு இடம் பெற்றது!

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சி. சிறிதரன்,கோவிந்தன் கருணாகரன், வினோதாரலிங்கம் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர்.

இந்த கலந்துரையாடலில் நாட்டின் பொருளாதார இஸ்த்திர தன்மையை ஏற்படுத்துவது தொடர்பாகவும் சர்வ கட்சி அமைப்பது,சர்வகட்சி வேலை திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் தமிழர்களின் அடிப்படை பிரச்சனைகள் அரசியல் தீர்வு தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில் தமிழ் மக்களின் முக்கிய அடிப்படைப் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்கின்ற விடயமும் பேசப்பட்டன அதில் அரசியல் கைதிகளின் விடுதலையை உடனடியாக செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி கூறியதாகவும் தெரிவித்திருந்தார்கள், அதோடு அரசியல் தீர்வு தொடர்பாகவும் கலந்துரையப்பட்டதாகவும் ஜனாதிபதியின் சிம்மாசன உரையின்போது அந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதுடன் இந்தியாவின் நட்பு தொடர்பாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டு இருந்தார். ஜனாதிபதியின் இன்றைய சிம்மாசன உரை ஒரு ஒளிக்கீற்றாக தென்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.